ஊத்தங்கரை – டிசம்பர் 08"
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை எதிர்த்து அனுசரிக்கப்படும் “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” ஒட்டி, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கருப்பு துண்டு அணிந்து, கருப்பு கொடி ஏந்திய மாபெரும் கோரிக்கை போராட்டம் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் சல்மான், ஏஜாஸ் கான், மாவட்ட பொருளாளர் தாஜுதீன், இளைஞரணி செயலாளர் முகமது ரஃபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அல்தாப் அஹமது, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சனாவுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் சேகர், தி.கா பொதுக்குழு உறுப்பினர் பழ. பிரபு, திமுக மேற்கு மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம், மக்கள் அதிகாரம் கழகம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் ரசூல் பாஷா, நாசர், ஷான்பாஷா, கலீல் பாஷா, திமுக ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், மாநில மகளிர் அணி பிரச்சாரக்குழு துணை செயலாளர் மருத்துவர் மாலதி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய், பேரூர் நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், பேரூர் அவை தலைவர் தணிகை குமரன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ஜாவித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர்கள் ஜெயலட்சுமி, அசோகன், திமுக நிர்வாகிகள் ஜெயச்சந்திர பாண்டியன், அசோக், அலினா சில்க்ஸ் உரிமையாளர் பாபு அப்துல் சையத், நகர மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் இலியாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மாவட்ட செயலாளர் வாஜித் பாஷா வரவேற்புரை வழங்கினார்.


No comments:
Post a Comment